Thursday, February 3, 2011

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும் இளம் பெண் !!!
அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது இளம்பெண்  மருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் 
இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே மற்றும் இவர் உடம்பில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு வெறும் 0% இதனால் இவர் சாப்பிடாமல்  பட்டினி கிடக்கிறார் என்று அர்த்தம் இல்லைஇவர் ஒரு நாளைக்கு 60 முறை சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ??

lizzie என்ற இந்த பெண்ணுக்கு கிரிஸ் என்ற 15 வயது இளைய சகோதரரும் ,மரினா என்ற சகோதரி வயது 15 இருக்கிறார்கள் இவர்கள் மற்ற சிறுவர்களை போலவே நார்மலாக இருக்கிறார்கள்  
இந்த பெண்ணின் தாய் இவரை பற்றி கூறுகையில் ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார்  
 இவர் சிறுமியாக இருக்கும் போது பெரும்பாலும் இவருக்கான உடையை பொம்மைகளுக்கான உடைகள் விற்கும் இடத்தில்தான் வாங்குவார்களாம் ஏனென்றால்  மற்ற சிறுவர் கடைகளில் விற்கும் உடை இவருக்கு பொருந்தாது என்பதால்  
ஆனால் மருத்துவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே நோர்மலான வாழ்கை வாழ்ந்துவரும் lizze கூறுகையில் ''நான் தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் ''என்கிறார்
டிஸ்கி : இரண்டு முறை சாவின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளார் இவர் இருந்தும் சோர்ந்து வீட்டுகுள்ளேயே முடங்கிவிடாமல் தன்னம்பிக்கையோடு சாவோடு  போராடி வரும் இவர்நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான் மறக்காமல் ஒட்டு போடுங்க கருத்து மற்றவர்க்கும் பரவட்டும்  

13 comments:

ஜெ.ஜெ said...

இப்படி ஒரு வினோத பெண்ணா?? வருந்துகிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ஓ மை காட்.......................
இவரின் தன்னம்பிக்கை அபாரம்......

ரேவா said...

வருந்ததக்கது அதே நேரத்தில் அவரது தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும்..பகிர்வுக்கு நன்றி தோழி fara

தம்பி கூர்மதியன் said...

ஆஹா தேங்க்ஸ் தோழி.!!!
அவருக்கு எனது பாராட்டுகள்..
அப்பரம் ஓட்டு.. அத எப்படிங்க போடுறது..??? ஒரு வெப்சைட்லயும் ஷேர் பண்ணலயே.!!

பலே பிரபு said...

தன்னம்பிக்கை வளர்க்கும் தகவல்!!!

கவிதைகளும் அருமை தோழி!!! (மூன்று நாளாய் வர முடியவில்லை )

sifran said...

nalla thoguppu en iniya frnde :)

Anonymous said...

நல்லவர்களை கடவுள் ஒருபோதும் கை விடுவதில்லை... உண்மை அக்கா....:)

எல்லோராலும் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து வாழ முடியும்...!! நம்பிக்கை இருந்தால்...:)

கோமாளி செல்வா said...

ரொம்ப கொடுமைங்க .. ஆனாலும் அவுங்களோட தன்நம்பிக்கைய பாராட்டியே ஆகணும் !!

பலே பிரபு said...

என்ன தோழி ரொம்ப நாட்களாக ஆளையே காணோம். பதிவு இட்டால் ஒரு newsletter கொடுக்கவும்.

India Free Traffic said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

"தாரிஸன் " said...

புது செய்திதான்....

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி