Tuesday, January 25, 2011

மீட்க வருவாய் என்ற நம்பிகையுடன் இவள்....



உன் உறவின்றி வாடும் 
பேதை பெண்ணின் கண்ணீர் கோலங்கள்
நீ அறிவாயோ என் மன்னவனே
உன்னை மறக்க நினைக்கும் 
ஒவ்வொரு கணமும் 
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
ஆயிரம் மடங்கு வேகத்தில் என்னை சூழ்கின்ற உன் நினைவுகள்
சூறாவளியில் சிக்கிய சிறு இறகாணேன் நான் இன்று 
உன் நினைவுகளின் பாரம் கூட இன்பம்தான் 
நீ என் அருகில் இருக்கையிலே
ஆனால் இன்றோ உன் பெயர் சொன்னால் கூட 
கண்கள் அடைமழை சிந்துகின்றன 
இதயத்தில் இடி இடிக்கின்றது
போதும்
 இத்துடன் நிறுத்திகொள்   உன் பிரிவென்ற நாடகத்தை
இதற்கு மேலும் தாங்கி கொள்ளும் சக்தி 
இந்த சின்னஞ்சிறிய இதயத்திற்கு இல்லை ............ 
 ...... 

15 comments:

sakthistudycentre-கருன் said...

காதல் மணம் வீசும் கவிதை அருமை..
ஓட்டும் போட்டாச்சு...
தமிழ்மணத்தில் சோ்க்கவும்.

chammy fara said...
This comment has been removed by the author.
chammy fara said...

sakthistudycentre-கருன்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ......... தமிழ் மணத்தில் இணைக்க பல முறை முயன்று விட்டேன் முடியவில்லை.....
வேறு வழிகள் ஏதும் இருந்தால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் ........ :)

தம்பி கூர்மதியன் said...

சத்தியமா எனக்கு காதல் கவிதய படிச்சு போர் அடிச்சிடுச்சுங்க.. யார் பிரிஞ்சிருந்தாலும் வந்து சேந்துடுங்கப்பா..!!!

Nagasubramanian said...

காதலர்கள் தோற்கலாம். காதல் என்றுமே தோற்பதில்லை.

மாணவன் said...

இப்போதுதான் முதன்முறை வருகிறேன் உங்கள் வலைப்பூவிற்கு அருமையாக உள்ளது சகோ...

கவிதை அருமை...

தொடர்ந்து கலக்குங்க...

மாணவன் said...

உங்கள் வலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

மாணவன் said...

//உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ......... தமிழ் மணத்தில் இணைக்க பல முறை முயன்று விட்டேன் முடியவில்லை.....
வேறு வழிகள் ஏதும் இருந்தால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் ........ :)//

உங்களின் இந்த பிரச்சினைக்கு நண்பர் நீச்சல்காரன் அவர்களின் பதிவில் சென்று பாருங்கள் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் லிங்க்:
தமிழ்மணத்தைப் பயன்படுத்துவது எப்படி?

நன்றி

மாணவன் said...

//உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ......... தமிழ் மணத்தில் இணைக்க பல முறை முயன்று விட்டேன் முடியவில்லை.....
வேறு வழிகள் ஏதும் இருந்தால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் ........ :)//

உங்களின் இந்த பிரச்சினைக்கு நண்பர் நீச்சல்காரன் அவர்களின் பதிவில் சென்று பாருங்கள் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும் லிங்க்:
தமிழ்மணத்தைப் பயன்படுத்துவது எப்படி?

நன்றி

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
சத்தியமா எனக்கு காதல் கவிதய படிச்சு போர் அடிச்சிடுச்சுங்க.. யார் பிரிஞ்சிருந்தாலும் வந்து சேந்துடுங்கப்பா..!!!////
காதலில் திளைத்து இருக்கையில் சோககவிதைகள் போர் அடிகத்தான் செய்யும் தம்பி :) :) தங்கள் வருகைக்கு நன்றி.......... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

chammy fara said...

Nagasubramanian said...
காதலர்கள் தோற்கலாம். காதல் என்றுமே தோற்பதில்லை.///மிக சரியான வார்த்தைகள்......... உண்மை காதல் என்றும் அழியாது தோற்காது
தங்கள் வருகைக்கு நன்றி.......... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

chammy fara said...

மாணவன் said...
இப்போதுதான் முதன்முறை வருகிறேன் உங்கள் வலைப்பூவிற்கு அருமையாக உள்ளது சகோ...
கவிதை அருமை...
தொடர்ந்து கலக்குங்க//./
உங்களின் இந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது சகோ :)தங்கள் வருகைக்கு நன்றி.......... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

/

chammy fara said...

மாணவன் said...
உங்கள் வலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....//உங்கள் வாழ்த்துக்கள் என் தன்னம்பிக்கையை தூண்டும் உரங்கள் மிக்க நன்றி சகோ :)

தம்பி கூர்மதியன் said...

//காதலில் திளைத்து இருக்கையில் சோககவிதைகள் போர் அடிகத்தான் செய்யும் தம்பி :) :) தங்கள் வருகைக்கு நன்றி.......... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
//

நீங்க பாட்டுக்கு ஏதாவது புரலிய கிளப்பிடாதீங்க.!! சோக கவிதையோ, மகிழ்ச்சி கவிதையோ காதலை ஒதுக்கிட்டு வெளியில் வந்து பாருங்க.. இன்னும் எவ்வளவு அருமையான விசயம் இருக்கு.. கவிதை எழுதுற திறமையும் ஆர்வமும் எல்லாருக்கும் வர்றதில்ல.. அது இருக்குற கொஞ்ச பேரும் காதல்னு ஒரு கொடிய பிடிச்சிட்டே தொங்குனா எப்படி.??? கொடி அறுந்து விழுந்திடாது.??? மத்தபடி எனது தொடர்ந்த ஆதரவு தங்களுக்கு கண்டிப்பாக உண்டு..

chammy fara said...

தம்பி கூர்மதியன் said.நீங்க பாட்டுக்கு ஏதாவது புரலிய கிளப்பிடாதீங்க.!! சோக கவிதையோ, மகிழ்ச்சி கவிதையோ காதலை ஒதுக்கிட்டு வெளியில் வந்து பாருங்க.. இன்னும் எவ்வளவு அருமையான விசயம் இருக்கு.. கவிதை எழுதுற திறமையும் ஆர்வமும் எல்லாருக்கும் வர்றதில்ல.. அது இருக்குற கொஞ்ச பேரும் காதல்னு ஒரு கொடிய பிடிச்சிட்டே தொங்குனா எப்படி.??? கொடி அறுந்து விழுந்திடாது.??? மத்தபடி எனது தொடர்ந்த ஆதரவு தங்களுக்கு கண்டிப்பாக உண்டு.///

என்ன செய்ய சகோ காதல் என் வாழ்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பின்னி பிணைஞ்சு
என் உதிரத்தில் கலந்துருச்சே......எனக்கும் கவிதை எழுத வரும்னு என் காதல பிரிஞ்ச நொடிதானே உணர்ந்தேன்
.இப்போதான் கவிதை எழுத ஆர்வம் வந்துருக்கு சகோ இனிமேல் வாழ்வின் பலநிலைகளில் பயணிக்கும் கவிதைகளை தர முயற்சிக்கிறேன்..........உங்கள் வற்றாத ஆதரவுக்கு நன்றி :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி