Monday, January 24, 2011

இது கனவென்றாலும் கவலை இல்லை........


தனிமை சிறையில் சிக்கி சின்னாபின்னமாய்
சிதைந்து போய் இருந்த என்னை மீட்டு
காதல் தேசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து
உன் மனதை ஆளும்
வாய்ப்பை தந்தாய் மன்னவா
உன் கை கோர்த்து இந்த உலகை வெல்ல
நான் கனவு கண்டு கொண்டிருக்கும் வேளையில்
இந்த தேசமே கனவு உனக்கு இதில் இடமில்லை
என்று சொல்லி என்னை சுக்கு நூறாய் உடைத்தெறிய பார்க்கிறாயே என்னவனே
இது கனவென்றாலும் கவலை இல்லை
இந்த கனவே என்னை நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறது
என் ஆருயிரே
மீண்டும் என்னை தனிமை சிறைக்கு அனுப்பி விடாதே
உன் காதல் தேசத்தின் மகாராணியாக அல்ல
உன் தேசத்தின் ஒரு பணிபெண்ணாகவாவது என்னை இருக்க விடு......
உனக்கு சேவகம் செய்தே கடத்தி விடுவேன்
எஞ்சியுள்ள என் வாழ்நாட்களை...........

12 comments:

வெறும்பய said...

எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை எழுத்துக்களின் வர்ணம் மாற்றினால் படிப்பதற்கு வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை)) அப்படியே word verification நீக்கி விடுங்கள் இதனால் பலர் பின்னூட்டமிடாமல் செல்ல வாய்ப்புள்ளது...

வெறும்பய said...

கவிதை அழகு.. வரிகளில் வலிகள் தெரிகின்றன..

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கவிதை அருமை . தொடர்ந்து எழுதுங்கள்

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

chammy fara said...

///வெறும்பய said...
எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை எழுத்துக்களின் வர்ணம் மாற்றினால் படிப்பதற்கு வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை))///
எனக்கும் இதே யோசனைதான் நண்பா
ஆனால் மேட்டர் என்னன்னா எனக்கு எப்டி எழுத்துகளின் வர்ணம் மாற்றுவது என்று தெரியவில்லை
விரைவில் தெரிந்து கொண்டு மாற்றி விடுகிறேன்..... உங்கள் கருத்துக்கு நன்றி :)

chammy fara said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி @ வெறும்பய..

chammy fara said...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥..அவர்களுக்கு நான் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருபவள்
உங்கள் கவிதைகளின் மிக பெரிய ரசிகை....... உங்கள் பாராட்டு எனக்கு மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை தருகிறது
மிக்க நன்றி....... :) :.♪ ♫

chammy fara said...

Word verification ஐ எப்படி நீக்குவது என்று யாரவது தெரிந்தவர்கள் கற்று தந்தால் மிக உதவியாக இருக்கும் )

பலே பிரபு said...

கவிதை நல்லா இருக்கு.

இது ப்ளாகர் default டெம்ப்ளேட் இல்லை என நினைக்கிறேன். எனவே நீங்கள் பதிவின் நிறத்தை மாற்ற HTML எடிட்டில் சில நிறங்களில் coding களை மாற்ற வேண்டி இருக்கும். முயற்சி செய்து பார்க்கவும்.

பலே பிரபு said...

இல்லை எனில் வேறு டெம்ப்ளேட் பயன்படுத்தவும். ஆனால் இந்த டெம்ப்ளேட் மிக அழகாய் உள்ளது. நிறங்களை மட்டும் மாற்ற முயற்சி செய்யவும்.

chammy fara said...

பலே பிரபு நீங்கள் சொன்னது போல் HTML எடிட்டில் சில மாற்றங்களை செய்தேன் சகோ கவிதை தலைப்புகள் மற்றும் பின்னூட்டங்களின் நிறத்தை மட்டுமே மாற்ற முடிந்தது ஆனால் கவிதையின் எழுத்துகளை நிறம் மாற்றம் செய்ய முடியவில்லை..
இந்த டெம்ப்ளேட் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதனால் மாற்றுவதற்கு மிகுந்த கடினமான ஒன்றாய் இருக்கிறது சகோ.......
இதற்கான தீர்வை தேடி கொண்டிருக்கிறேன்........... விரைவில் மாற்றம் செய்கிறேன் ..

chammy fara said...

பலே பிரபு தங்கள் வருகைக்கும் உங்கள் அன்பான கருத்துகளுக்கும் நன்றி சகோ :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி