Friday, January 28, 2011

11 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயான சிறுமி ..... அதிர்ச்சி தகவல்.......இந்த அதிர்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது பல்ஜீரிய நாட்டில் அந்த சிறுமிக்கு வயது 11 

அந்த சிறுமியின்   கணவனுக்கோ 19 வயது .......... சில மாதங்களுக்கு முன் இந்த பெண்ணிடம் வம்பு செய்தவர்களிடம் இருந்து அவன் இவளை காப்பாற்ற போய் காதலில் முடிந்திருகிறது.........
இது அந்த நாட்டை பொறுத்த வரை சட்டப்படி குற்றம் என்பதால் அவன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 7 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளான் 


இந்த சிறுமியோ படிப்பை கை விட்டு குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பில்.....

நல்ல வேளை இந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறாமல்
 காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளான் இந்த வாலிபன்........
இந்த தம்பதிகள் இப்போது சந்தோசமா இல்லறம் நடத்துறாங்க...........
இந்த செய்தி தொடர்பான காணொளி


டிஸ்கி : இந்த செய்திய படிச்ச பிறகு மனசு ரொம்ப கனத்து போச்சுங்க......
 இளைய சமுதாயம் எந்த அளவுக்கு சீரழிஞ்சு கொண்டு வருகிறது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?      இது போன்ற சம்பவங்கள் பரவாமல் இருக்கணும்ன மக்களுக்கு விழிப்புணர்ச்சி  அவசியம்......

 தங்களோட குழந்தைங்க எங்கே போறாங்க யாரோட பழகுறாங்கன்னு பாக்கணும், தெரிஞ்சி வச்சுக்கணும் ...
இதெல்லாத்தையும் விட முக்கியமான ஒன்னு தங்கள் குழந்தைகளிடம் எப்போவுமே தோழமையா பேசணும் 
அவங்களோட சந்தேகங்களை தீர்த்து வைக்கிற ஆசானா   இருக்கனும்.......
அவங்க எதிர்பாக்குற தோழமையும் பகிர்தலுக்கான இடமும் உங்ககிட்டேயே கெடைச்சுட்டா  
அவங்க ஏன் தவறான நண்பர்களோட சேர்ந்து இப்படி சீரழிய போறாங்க???.
 
உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சுருந்தா மறக்காம   ஓட்டு போடுங்க மத்தவங்களுக்கும்  இந்த கருத்து பரவட்டும் 
                                                                                   நன்றி 


11 comments:

மாணவன் said...

“என்ன கொடுமை சார் இது”

ஒருவிதத்தில் வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தாலும் அவர்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வது கொஞ்சம்..............

கண்டிப்பாக இன்றைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..

சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க சகோ

MANO நாஞ்சில் மனோ said...

கலிகாலம்னு சொல்றது இதைத்தானோ...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடைய மாணவன் சுட்டுட்டு போயிட்டாரே...............

தம்பி கூர்மதியன் said...

எப்பா இந்த பதிவு போட்டவங்களுக்கும், கமண்ட் போட்டவங்களுக்கும் இப்ப இருக்குறது மட்டும் தான் தெரியுமா.??? பழசெல்லாம் தெரியாதா.??? நம்ம நாட்லயே அந்த காலத்துல இந்த வயசுல தானே கல்யாணம் பண்ணினாங்க.. இருந்தாலும் இந்த காலத்துல இட் ஈஸ் சோ பேட்.. நான் ரொம்ப வருத்தபடுறன்...

பலே பிரபு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி.

chammy fara said...

மாணவன் said...
“என்ன கொடுமை சார் இது”

ஒருவிதத்தில் வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தாலும் அவர்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வது கொஞ்சம்..............

கண்டிப்பாக இன்றைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்..

சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க சகோ/////


உண்மைதான் சகோ விழிப்புணர்ச்சி அவசியம்
அதற்கு எனால இயன்றதை நான் செஞ்சுட்டேன் :)

chammy fara said...

MANO நாஞ்சில் மனோ said...
கலிகாலம்னு சொல்றது இதைத்தானோ...!!/////

சந்தேகமே இல்ல சகோ இதைத்தான் சொல்றாங்க கலிகாலம் என்று

chammy fara said...

MANO நாஞ்சில் மனோ said...
அடடடா வடைய மாணவன் சுட்டுட்டு போயிட்டாரே...////


வடையா ??? என்ன சொல்றிங்க சகோ?

chammy fara said...

தம்பி கூர்மதியன் said...
எப்பா இந்த பதிவு போட்டவங்களுக்கும், கமண்ட் போட்டவங்களுக்கும் இப்ப இருக்குறது மட்டும் தான் தெரியுமா.??? பழசெல்லாம் தெரியாதா.??? நம்ம நாட்லயே அந்த காலத்துல இந்த வயசுல தானே கல்யாணம் பண்ணினாங்க.. இருந்தாலும் இந்த காலத்துல இட் ஈஸ் சோ பேட்.. நான் ரொம்ப வருத்தபடுறன்/////


தம்பி அந்த காலத்துல முறையா திருமணம் பண்ணி வச்சாங்க
இங்க கதையே வேறப்பா
அந்த காலத்துல பால்ய மனம் நடந்ததையே தப்புன்னு சொல்லி அரசாங்கம் அத தடை பண்ணி ரொம்ப நாள் ஆச்சுப்பா அது தங்களுக்கு தெரியும்தானே?

chammy fara said...

பலே பிரபு said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி./////


உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ :)//

hayyram said...

இதிலென்ன தவறு இருக்கிறது. பருவம் வந்தால் கலவி செய்தல் இயர்கைதானே! நாம் இயற்கைக்கு மாறாக வாழ்வதால் இயற்கையான கூடல் தவறாகுமா என்ன?

read it for more

http://hayyram.blogspot.com/2010/06/blog-post_16.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி