Monday, January 31, 2011

என் காதலின் காணிக்கை!!!இப்போதெல்லாம் நீ எனக்கு அதிகமான வலிகளையும்
கண்ணீரையும் மட்டுமே தந்து  கொண்டு இருந்தாலும்
 என்றுமே நான் உனக்கு என் புன்னகையை மட்டுமே பரிசாய்  தருவேன் 
நீ தந்த இன்பமான நாட்களின் நினைவுகளிலேயே 
தங்கி விட ஏங்குது என் மனம் 
நீ தந்த கண்ணீர்த்துளிகளை எல்லாம்
முத்தாய் மாற்றி சேமித்து வைத்துள்ளேன்
நாம் சந்திக்கும் நாளில்
உன் காலடியில் சமர்ப்பிப்பேன் 
என் காதலின் காணிக்கையாய் !!!

Sunday, January 30, 2011

உன் நினைவுகளின் நிழலில் ..........உன்னை எண்ணி உனக்காக கலங்குவதையே 
தொழிலாக கொண்டிருந்த என் கண்கள் கூட 
கலங்குவதை நிறுத்தி விட்டன சில நாட்களாய்
ஆனால் இந்த பாவப்பட்ட நெஞ்சமோ நிறுத்தாமல்
கலங்கி கொண்டுதான்  இருக்கிறது
உன்னையும் உன் நேசத்தையும் நினைத்து.... 
திருவிழா நெரிசலில் சேயை தவறவிட்ட
தாய் போல் என் நெஞ்சின்
படபடப்பும் துடி துடிப்பும்....
இன்னும் எத்தனை காலத்திற்கோ?
விடை தெரியா கேள்விகள் ......
விடையாய் நீ வரும் வரை  காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................

Friday, January 28, 2011

11 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயான சிறுமி ..... அதிர்ச்சி தகவல்.......இந்த அதிர்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது பல்ஜீரிய நாட்டில் அந்த சிறுமிக்கு வயது 11 

அந்த சிறுமியின்   கணவனுக்கோ 19 வயது .......... சில மாதங்களுக்கு முன் இந்த பெண்ணிடம் வம்பு செய்தவர்களிடம் இருந்து அவன் இவளை காப்பாற்ற போய் காதலில் முடிந்திருகிறது.........
இது அந்த நாட்டை பொறுத்த வரை சட்டப்படி குற்றம் என்பதால் அவன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 7 வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளான் 


இந்த சிறுமியோ படிப்பை கை விட்டு குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பில்.....

நல்ல வேளை இந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறாமல்
 காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளான் இந்த வாலிபன்........
இந்த தம்பதிகள் இப்போது சந்தோசமா இல்லறம் நடத்துறாங்க...........
இந்த செய்தி தொடர்பான காணொளி


டிஸ்கி : இந்த செய்திய படிச்ச பிறகு மனசு ரொம்ப கனத்து போச்சுங்க......
 இளைய சமுதாயம் எந்த அளவுக்கு சீரழிஞ்சு கொண்டு வருகிறது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்?      இது போன்ற சம்பவங்கள் பரவாமல் இருக்கணும்ன மக்களுக்கு விழிப்புணர்ச்சி  அவசியம்......

 தங்களோட குழந்தைங்க எங்கே போறாங்க யாரோட பழகுறாங்கன்னு பாக்கணும், தெரிஞ்சி வச்சுக்கணும் ...
இதெல்லாத்தையும் விட முக்கியமான ஒன்னு தங்கள் குழந்தைகளிடம் எப்போவுமே தோழமையா பேசணும் 
அவங்களோட சந்தேகங்களை தீர்த்து வைக்கிற ஆசானா   இருக்கனும்.......
அவங்க எதிர்பாக்குற தோழமையும் பகிர்தலுக்கான இடமும் உங்ககிட்டேயே கெடைச்சுட்டா  
அவங்க ஏன் தவறான நண்பர்களோட சேர்ந்து இப்படி சீரழிய போறாங்க???.
 
உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சுருந்தா மறக்காம   ஓட்டு போடுங்க மத்தவங்களுக்கும்  இந்த கருத்து பரவட்டும் 
                                                                                   நன்றி 


மீண்டும் என் சோலையில் வசந்தம் வராதா???என் காத்திருப்புக்களும் எதிர்பார்ப்புகளும்
மெல்ல மெல்ல இறந்து    கொண்டிருக்கும்
இந்த வேளையிலும் கூட எனக்கு ஒரே ஒரு ஆசைதான்
மீண்டும் என் சோலையில் வசந்தம் வராதா???
இறந்து போன என் காதல் செடிகளில் உன் அன்பு பூக்காதா?
நீ எனக்கானவன் 
உன்னிடத்தில் எனக்கான அன்பு இல்லை 
என்றால் கூட இவ்வளவு துடித்திருக்க மாட்டேன் 
என் மேல் உயிரையே வைத்திருந்தும் 
ஏன் விலகி செல்ல பார்க்கிறாய்? 
விடை தெரியாத கேள்விகளுடன்.........
                                         காத்திருக்கும் உன்னவள்
டிஸ்கி :இது கவிதையானு  எல்லாம் கேக்கபடாது ........
என்னவனுக்கான கடிதம் ,லெட்டர், மடல் இல்ல இல்ல கடுதாசின்னு  கூட சொல்லலாம்


புடிச்சிருந்தா   மறக்காம ஓட்டு போட்டு ஆதரிங்கன்னோ :) 

Thursday, January 27, 2011

அதி நவீன மடிக்கணினி பல வியக்கத்தக்க வசதிகளுடன் தற்போது விற்பனையில் !!!


கொசுத் தொல்லையா   ?
எடுரா அந்த மடிகணினிய நல்லா சாத்து அந்த கொசுவ ஹ்ம்ம் விடாதே
எவ்ளோ நேரம்தான் நானும் கால் வலிக்காத மாதிரியே ஆக்ட் குடுக்குறது.......
ரொம்ப போர் அடிக்குதா? இருக்கவே இருக்கு நம்ம மடிகணினி பேட் 
வாங்க டேபிள் டென்னிஸ் வெளையாடலாம் ...  !
காஸ் வேற தீர்ந்து போச்சு அவசரமா முட்ட பொரிக்கனுமா  ?
இருக்கவே இருக்கு நம்ம அதிநவீன மடிகணினி 
சுத்தம் சுகம் தரும் 
கடலை உடைக்க வேண்டுமா ???கவலை வேண்டாம் அதற்கும் வசதிகள் உண்டு இந்த அதி நவீன மடிகணினியில்வாங்கி விட்டிர்களா? 


டிஸ்கி : தம்பி கூர்மதியன் மற்றும் என் ரசிகபெருமக்களின் (ஓ அந்த ஆச வேற இருக்குதா? ) வேண்டுகோளுக்கிணங்க இந்த மொக்க போஸ்ட் போடப்படுகிறது ....  ஹிஹிஹிஹிஹிஹி :).
                   
  
அடுத்தவங்க ப்ளாக்குக்கு ஓட்டு போட்டு வளர்த்தா தான் ப்ளாக் தானா வளரும்னு 
பெரியவங்க சொல்லி இருக்காங்க  சோ சமத்தா ஓட்டு போட்டு உங்க ப்ளாக் வளத்துகோங்க  என்ன ஹிஹிஹிஹிஹி :) பிரிவின் ரணங்கள்....
யாராலும் நிரப்ப முடியாமல் 
நீ விட்டு சென்ற தனிமையின் 
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால்  நிரப்ப முயன்று 
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......

Wednesday, January 26, 2011

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை ??( 1 )வழக்கமான இணைய நட்புகளை போல
சாதாரணமாக மிக சாதாரணமாக தான்
ஆரம்பித்தது உனக்கும் எனக்குமான நட்பு.....
நாட்கள் செல்ல செல்ல உன்னை நான் சீண்ட 
என்னை நீ சீண்ட என்று நட்பின் அழகிய காலகட்டங்கள் அவை 
பிறகொரு நன்னாளில் நான் கேட்டேன் உன்னை
எத்தனையோ இணைய நண்பர்கள் உண்டு 
எனக்கு அவர்கள்  எல்லாம் 
என்னுடன்   பழக  ஆரம்பித்த  மறுகணம்  
என்னை காண வேண்டும் என்றார்கள்  
இத்தனை  நாள்  பழகியும்  உனக்கு 
ஒரு முறை கூடவா என்னை காண வேண்டும்
என்ற ஆவல் தோன்றவில்லை என்று
அதற்கு நீ சொன்ன பதில் 
உன்னை என் மனதில் லட்சம் நங்கூரமிட்ட சிம்மாசனத்தில்
அமர்த்தியது 
ஆம் நம் நட்பு மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கியது!!!
...                                                                                             தொடரும்...........

டிஸ்கி : இது கவிதையா இல்லையான்னெல்லாம் எனக்கு தெரியாதுப்பா
ஆனா என் கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பி பாக்குறப்ப மனசுல தோணுன வரிகளை அப்டியே 
இங்கே கொட்டிட்டேன்......... கவிதை உருவில் என் காதல் கதை.......... :)  (மொதல்ல இது கவிதைதானா?? )
 இத படிச்சுட்டு உங்களுக்கு புடிச்சு இருந்தா ஓட்டு போட்டு பிரபலப்படுத்துங்க 
புடிக்காட்டியும்  நீங்க அனுபவிச்ச இம்சைய  இந்த வையமும் அனுபவிக்கட்டுமேனு    நல்ல எண்ணத்துல ஓட்டு போடுங்க ஹிஹிஹிஹி ............... :)  Tuesday, January 25, 2011

இறப்பிற்கான ஒத்திகைமிகவும் எளிதாகத்தான் சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்ற வார்த்தையை 
எப்படி உன்னை பிரிந்து இருப்பேன் 
என்ற கேள்விக்கும் தயாராக இருந்தது
 பதில்  உன்னிடம்.....................
எப்போதும்   என்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதை நிறுத்து
நாளடைவில் என்னை விட்டு விலகி விடுவாய் என்றாய்.....
உன்னை விட்டால் வேறெதையும் நினைக்க தெரியாத பாவி 
இவள் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல்.............. 

காத்திருப்பு

என்றாவது ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவோம் என்ற நம்பிக்கையில்
என் அறையில் ரகசியமாய் பதுக்கப்படுகின்றன  ....
உனக்காக நான் வாங்கிய பரிசு பொருட்களும்
என் இதய அறையில் உனக்காக நான் சேமித்த 
காதலும்..................................

மீட்க வருவாய் என்ற நம்பிகையுடன் இவள்....உன் உறவின்றி வாடும் 
பேதை பெண்ணின் கண்ணீர் கோலங்கள்
நீ அறிவாயோ என் மன்னவனே
உன்னை மறக்க நினைக்கும் 
ஒவ்வொரு கணமும் 
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
ஆயிரம் மடங்கு வேகத்தில் என்னை சூழ்கின்ற உன் நினைவுகள்
சூறாவளியில் சிக்கிய சிறு இறகாணேன் நான் இன்று 
உன் நினைவுகளின் பாரம் கூட இன்பம்தான் 
நீ என் அருகில் இருக்கையிலே
ஆனால் இன்றோ உன் பெயர் சொன்னால் கூட 
கண்கள் அடைமழை சிந்துகின்றன 
இதயத்தில் இடி இடிக்கின்றது
போதும்
 இத்துடன் நிறுத்திகொள்   உன் பிரிவென்ற நாடகத்தை
இதற்கு மேலும் தாங்கி கொள்ளும் சக்தி 
இந்த சின்னஞ்சிறிய இதயத்திற்கு இல்லை ............ 
 ...... 

தமிழ் வலைபதிவர்களின் சங்கமம்


நிலா காதலி
 
வலைப்பூ பெயர்: நிலா காதலி

வலைப்பூ முகவரி:  http://nilakadhali.blogspot.com/

வலையுலகப் பெயர்:chammy fara

இயற்பெயர்: பாத்திமா பார்ஹானா

வயது: 24 (16 /1 /2011 அன்று )

பிறந்த தேதி:  29/1 /1986

ரத்த வகை:  'B '-POSITIVE

தொழில்:நம்ம தொழிலே இணையத்துல நேரத்த செலவிடுரதுதங்க

குடும்பம்:நான், என் தாய், இரு சகோதரர்கள்

ஈமெயில்: fathimafara86@yahoo.com

facebook :(profile பெயர் )angel _chammy fara

வலையுலக நண்பர்கள்: karuppan, jiff

பிடித்த வலைப்பூக்கள்: 
                                               கருப்பன்
                                               கசுமுசா
                                               தொப்பி தொப்பி 
                                               பனித்துளி சங்கர்
                                               றோஜாக்கள்

மற்றும் கவிதை தொடர்பான அனைத்து வலைப்பூக்களும் பிடிக்கும்.

பதிவு வகை: கவிதைகள் மற்றும் படித்ததில் பிடித்தது

கூற  விரும்புவது:
நான் பதிவுலகிற்கு புதிய வரவு. எனக்கு உங்கள் அன்பான ஆதரவை   தாருங்கள்   நண்பர்களே.

வலைப்பூ:
சகோ பிரபு அவர்கள் தமிழ் வலை பதிவர்களை ஒன்று திரட்டும் அற்புதமான பணியை செய்து இருக்கிறார். 
நல்லமுயற்சி வாழ்த்துக்கள் பிரபு ...
பதிவர்கள்  தங்கள் தளத்தை தமிழ் வலைப்பதிவர்களின் அடையாளம்
என்ற இந்த தளத்தில்  இணைக்க http://bloggersbiodata.blogspot.com/  இந்த முகவரிக்கு சென்று உங்கள் வலைப்பூ  பற்றிய விபரங்களை சமர்பிக்கவும்..

என் வலைபதிவு பற்றிய விபரங்களை உங்கள் தளத்தில் பிரசுரித்ததற்கு நன்றி பிரபு சகோ ":).

மனித வடிவில் மிருகம் கண்டெடுப்பு....... வேற்று கிரகவாசியா??????!!!!

தாய்லாந்து அருகே ஒரு வினோத உருவம் கொண்ட மிருகம் கண்டெடுக்க பட்டுள்ளது  
இது வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என்று ஒரு சிலர் ஆருடம் கூறிகொண்டிருக்கும்    வேளையில் 
இல்லை இது ஒரு கடவுளின் அவதாரம் என அந்த ஊரின் ஒரு சாரார் அதற்கு பூஜை செய்து ஊது பத்தி ஏற்றி வழிபடவே ஆரம்பித்து விட்டனர் 
இந்த உருவம் என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புறம்
இது நிச்சயமாக கடவுளின் அவதாரம்தான் எனும் ஊரார் மறுபுறம்
                                                      ஜெயிக்கபோவது யாரு? 

Monday, January 24, 2011

இது கனவென்றாலும் கவலை இல்லை........


தனிமை சிறையில் சிக்கி சின்னாபின்னமாய்
சிதைந்து போய் இருந்த என்னை மீட்டு
காதல் தேசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து
உன் மனதை ஆளும்
வாய்ப்பை தந்தாய் மன்னவா
உன் கை கோர்த்து இந்த உலகை வெல்ல
நான் கனவு கண்டு கொண்டிருக்கும் வேளையில்
இந்த தேசமே கனவு உனக்கு இதில் இடமில்லை
என்று சொல்லி என்னை சுக்கு நூறாய் உடைத்தெறிய பார்க்கிறாயே என்னவனே
இது கனவென்றாலும் கவலை இல்லை
இந்த கனவே என்னை நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறது
என் ஆருயிரே
மீண்டும் என்னை தனிமை சிறைக்கு அனுப்பி விடாதே
உன் காதல் தேசத்தின் மகாராணியாக அல்ல
உன் தேசத்தின் ஒரு பணிபெண்ணாகவாவது என்னை இருக்க விடு......
உனக்கு சேவகம் செய்தே கடத்தி விடுவேன்
எஞ்சியுள்ள என் வாழ்நாட்களை...........

தருவாயா ஓர் வரம் ??

உன் தோள்கள் நான் என்றும் இளைப்பாறும் நந்தவனம்
என்னை இறக்கி விட்டு விடாதே துவண்டு போவேன்
சிறகொடிந்த பறவையாய் இருந்த
என் சிறகுகளை சரி செய்தவன் நீ
எனக்கு பறக்க கற்று தந்தவன் நீ
ஒரு போதும் அந்த நன்றி மறந்து
உன்னை விட்டு பறந்து போக மாட்டேன்
உன்னுள் துடிக்கும் இதயமாக கூட வேண்டாம்
உன் பின்னால் நடக்கும் நிழலாக....
கடவுளின் முன் கைகூப்பி வரம் கேக்கும் பக்தையாக
உன் முன் நிற்கிறேன்............
தருவாயா அன்பே நான் கேட்கும் வரம் ?.
                                                          

நீ என் நண்பன் மட்டும் அல்ல

உன் ஒரு ஆறுதலான பார்வையால்
இறந்து கிடந்த என் மனதை
உயிர்த்தெழ வைத்தாய் நன்றி உயிரே
இதை விட இன்பம் உண்டா
இந்த பூமியிலே ?
இருந்தாலும் வேண்டாம் அன்பே எனக்கு
உன் ஒற்றை பார்வையும்
உன் கற்றை சிரிப்பும் போதும்
என் வாழ்வை நான் வாழ்ந்திட
உன்னை என் காதலனாய் இரு
என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன்
ஆனால் இவள் என்றும் உன் நட்பை காதலிக்கும்
நண்பி...........
நீ என் நண்பன் மட்டும் அல்ல
அப்படி நீ என் நண்பனாக மட்டுமே இருந்து இருந்தால்
உன் இழப்பு என்னை இவ்வளவு தடுமாற
செய்து இருக்காதே உயிரே
நீ என் தாய்
என் சேய்
என் நண்பன்
என் ஆசான்
என் உலகம்
எல்லாமுமாக மாறி போனாயடா நீ
உன்னை இழந்தால்
நான் என் சுய நினைவை இழந்து விடுவேன்.......
நீ என் அருகில் இருந்தால்
இந்த உலகையே வென்று வருவேன்
உன் கைபிடித்து நடக்கும் அதிர்ஷ்டம் எனக்கில்லை அன்பே
ஆனால் உன் தோள் சாய்ந்து அழகூட அருகதை இல்லாதவள் ஆக்கிவிடாதே என்னை ..............
                                                                                 என்றும் காதலு
டன்                                                                                                                                 

                                                                                             
                        

என் தாயும் ஆனவன் நீயடா


பிரிவு என்ற அமில வார்த்தைகள் வீசி என்னை சிதைத்தது போதும் அன்பே
மறைத்து வைத்த உன் பாசம் என்ற அமிர்தம் கொண்டு காப்பாய் என் வாழ்வை


எனக்கு தேவை எல்லாம் உந்தன் அருகாமை மட்டும்தானடா
உன் அருகாமை தரும் மகிழ்ச்சி
வேறு எதிலும் எனக்கு கிடைக்காதடா
நீ எந்தன் அருகில் இருந்தால்
அகில உலகம் அனைத்தும் என் காலடியில் இருப்பதாய் உணர்கிறேனடா
என்னை விட்டு விலகி செல்வதாய் நீ கூறும்
வார்த்தை அனைத்தும் பொய் என்று தெரிந்தும்
அந்த வார்த்தைகளின் வீரியம் தாங்காமல்
பற்றி எரிகிறேன் அன்பே........
அணைப்பாயா உன் பனி போன்ற பாச வார்த்தைகளால்?
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி