Friday, August 13, 2010

கஃபாவில் உள்ள கருப்பு கல்லின் தங்கத்திலான பழைய மூடி
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(GOLD COVER OF THE BLACK STONE IN KAABA - Topkapi Museum, Istanbul - Turkey)
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் காலடி தடம்
FOOT PRINT OF PROPHET MUHAMMED
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எகிப்து ஆட்சியாளர் முகாவுகிஸ்க்கு அனுப்பிய கடிதம்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
Prophet Muhammed's letter to Muqauqis, Cheif of Copts of Egypt. -Topkapi Museum, Istanbul - Turkey)


Add caption
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய வாள்
(SWORD OF PROPHET MUHAMMED)


ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்


ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(SWORDS OF KHALIFA SAHABIS)
Topkapi Museum , Isanbul - Turkey


Saturday, August 7, 2010

ஏன் என்றால் அவன் ஒரு முஸ்லிம்
Wednesday, August 4, 2010

ithuthan real love............ :)

என்னை ரசிக்கும் கவிதை புத்தகம் நீயடா


எத்தனையோ கவிதைகளை படித்ததுண்டு
ரசித்ததுண்டு 
ஆனால் என்னை ரசிக்கும் கவிதை புத்தகம் நீயடா......

காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?


புகைபிடிபவர்களை கண்டாலே அலறி ஓடும் 
பழக்கமுடையவள்  நான் 
உன்னை முதல் முதலாக கண்ட அன்று
ரசித்தேன் உன்னை ..........
உன்னுடன் சேர்த்து என்னிடம் அனுமதி வாங்கி
நீ புகைத்த சிகரெட்டையும்......... :)

Friday, July 23, 2010உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்
என்று கேட்பவனிடம்
என்னை காதல் செய்கிறாயே அது மட்டும்
போதும் என்றால் ........ போடி அது எனக்காக நான் செய்வது
உனக்காக என்ன வேண்டும் என்கிறானே ........
எப்படி புரிய வைக்க இவனுக்கு ....
இவன் காதல் தான் என்னை உயிருடன் இருக்க வைக்கிறது
என்பதை...................????


உனக்காக தாஜ் மஹால் எல்லாம் கட்ட மாட்டேன்
வேண்டும் என்றால் உன்னை இப்போதே கட்டி கொள்கிறேன்
என்று கொஞ்சுபவனை நான் என்ன சொல்ல?


நொடிக்கொரு தரம் என்னை தேவதை
என்பவனிடம் எப்படி சொல்ல?
என்னை தேவதையாய் ஆக்கிய
தேவன் நீதானடா என்று.........

Thursday, July 22, 2010

சூப்பர் குட்டி பொண்ணு.....

Wednesday, July 21, 2010


விழி அசைத்து சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறாய்
நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன்
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று

தனிமை


.உனக்கும் எனக்குமான இந்த பிரிவின்
தனிமையில் 
உன் மீதான என் காதல்
அதிகரித்து கொண்டே இருப்பதால் தான்
நான் இந்த பிரிவை இன்னும் நேசித்து கொண்டே இருக்கிறேன் .....


நீ இல்லாமல்
உயிர் வாழ முடியுமா? என்பதெல்லாம்
எனக்குத் தெரியாது............
நீ படித்தவன் தானே!
உனக்கும் கூடவா தெரியாது?
இதயம் இல்லாமல்
உயிர் வாழ முடியாது என்பது!!.......

நீயே என் உயிர்

சோகமாய் நான் இருந்தால் பதறுகிறாய்……….!
என் கண்கள் கலங்குவதர்க்குள்….
உன் கண்களில் இருந்து கண்ணீர்………..!

~


என் உயிராய் நீ இருக்கும் போது
எனக்கு என்ன பயம்…………..?
என் ஆசை காதலன் நீ ……………………………!

~

சோகங்கள் வரும் போது ……..
நீயே தோள் கொடுக்கிறாய்……..!
சந்தோசம் வரும் போது ……….
என்னை விட நீயே பூரிக்கிறாய்……………..!

~

வார்த்தைகள் தேவைப்படாமலே….
என் எண்ணங்களை சொல்பவனே………………!
என் பாசை புரிந்தவனே……
உன்னைப்போல் யாருமில்லை………….!
நீயே என் உயிர் காதலன்……………!

நீயே என் முதல் குழந்தை……………….!!கனவிலும் கண்ணோரம் உன்னை வைத்து
இமைக்காமல் காத்திருப்பேன்…………..!!

**

நீ தூங்கும் வேளையிலும் தாயாக
தாலாட்டு நான் பாட கண்ணே நீ கண்ணுறங்கு……..!!

**

கருவறையில் உன்னை பத்து
மாதம் சுமக்கவில்லை – இருந்தும்
நீயே என் முதல் குழந்தை……………….!!


காதலே உன்னை வலை
போட்டு தேடியதில்லை…
சுவாச காற்ரிலும் உன்
பெயர் சொல்லியதில்லை…
உணர்வில் கூட காதல்
எண்ணம் இருந்ததில்லை…
காதல் கொள்ள இதுவரை
ஆசை மனதில் வந்ததில்லை…………………..!
~~~~

புதுசாக பூத்த காதல் – அதிசயமாய்
என்னை மாத்தியபோதும் – மனதிலே
கோலங்கள் அளியாமல் உன் முகம்
அதிலே தெரியிதடா………………………………………!
~~~~

புதுதாக என் மனதில் நீ பிறந்தாய்
அன்று காதல் பூவை என்னில் மலரவைத்து
எண்ணங்கள் அத்தனையும் உனக்காக மாற்றிவிட்டு
உன் காதலியாய் என்னை உருமாற்றி செல்கிறாய்………………………….!
~~~~

இதமான மலர்க்கூட்டம் இணையக் கேட்டேன்
வெக்கத்தில் என் முகன் சிவக்க கேட்டேன்
வீசும் காற்றில் அவன் சுவாசம்
என்னை தளுவி செல்ல வேண்டும்
இதயங்கள் இரண்டும் இணையத்தான்
எண்ணங்கள் ஒவ்வொன்றும்
ஒன்றாக வேன்டும் என்றேன்…………………………..!
~~~~

இதயத் துடிப்பும் இன்று – காதல்
துடிப்பாய் மாறத்தான் – காதலன்
உன் பெயரை இதயம்
மறக்காமல் சொல்லுதடா……………………!
~~~~

தனிமையில் தவிக்க வைக்கும் காதல்
மனதை சிறையில் அடைத்து விட்டு
தனித்துவமாய் என்னை சிந்திக்க வைக்கிதடா………………..!
~~~~

நட்சத்திரம் பூத்திருந்தாலும்
நிலாவிற்கே மதிப்பதிகம் – எத்தனை
உறவுகள் என் எதிரில் வந்தாலும்
காதலன் உனக்கே அன்பதிகம்………………………..!
~~~~

ஒளி தரும் நிலவு
பக்கத்தில் இல்லை என்று
கவலைப்பட்டால் கிடைப்பதில்லை
காதலன் நீ இல்லை என்று
மனம் வருந்தினால் போதும்
மனதிலே நினைவாகவோ
நேரிலே நிஐமாகவோ
என் எதிரே வருகிறாய்…………………………….!
~~~~

எத்தனை உறவுகள் எனக்கிருந்தும்
இன்று உயிர் தேடும் உறவாக
உன்னைத் தேடுகிறேன்………………………!
~~~~

என் காதலனேஒவ்வொரு எழுத்தாய் உந்தன்
பெயரை எழுதிப் பார்க்கிறேன்
பிடித்த முதல் கவிதையாய்
தெரிவதென்ன என் காதலனே

அழகுச் சித்திரத்தின் உன் முகம்
என்றும் மறையாமல் எந்தன்
இதயத்தில் வரையபட்டிருக்கிறதே
இதுவென்ன என் ஓவியனே

கரை சேர துடிக்கும் அலையப்போல
என் மனம் உனைச் சேர பாய்வதென்ன
என் பாவலனே


என்னை மறந்து நான்
தனிமையில் சிரிப்பதென்ன

தனித்துவமாய் ஏதேதோ
சிந்திப்பதென்ன

காகித பக்கங்கள் எங்கும்
கவிதை என்ற பெயரில் நான்
கிறுக்குவதென்ன என் கவிஞனே

உன் நினைவுகளில் என்னைத்
தொலைத்து உன்னைத்தேடி தினம்
தவிக்கிறேனே

இது என்ன என்
இனியவனே இதுதான்
காதலா..?

இதைத்தான் காதல்
என்பார்களா..?

உன்னைக் காதலித்ததில்
இருந்து புதிய தனி உலகத்தில்
வாழ்வதாய் உணர்கிறேன் நான்
இதுதான்
காதலா..?

வெட்கம்உன் குறும்புகளை
என்னிடம்
கொடுத்துவிட்டு
என் வெட்கங்களை
அள்ளிச் செல்கிறாய்
இதை வைத்து
என்னடா
பண்ண‌ப்போறன்னு
கேட்டா
இவற்றை வைத்துதான்
என்
நாளைய குறும்புகள்
என்று
சிரித்து விட்டு
போகிறாய்!!!

Tuesday, July 20, 2010

இஸ்லாத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனரா?

இந்த படங்களை பார்த்து விட்டு முடிவு பண்ணுங்க

உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

படித்ததில் பிடித்தது.என்னை யாரிடமும்
விட்டுக் கொடுத்து பேசாத- நீ
யாருக்காகவும்
என்னை விட்டுக்
கொடுக்க மாட்டாயென்ற
நம்பிக்கையிலேயே நீள்கிறது
நம் காதல்!!!!!!!!!!!!!!!!!!

படித்ததில் பிடித்தது.நேற்று என் கனவில் நீ இல்லை!...
விழிகளுக்குள்ளே நீ
விளையாடிக்கொண்டிருக்க
உறக்கம் எங்கே வருகிறது
கனவுகள் காண?

உறங்காத என் கண்களுக்கு ஓய்வுகொடு..
இன்றொரு நாள் இடம் மாறிவிடு...
கண்களுக்குள்ளிருந்து கனவுக்குள்..
உறங்கிக்கொள்கிறேன் ஒரு நாளாவது.

எங்கே செல்லும் இந்த பாதை ...............???
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி