Thursday, February 3, 2011

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும் இளம் பெண் !!!




அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது இளம்பெண்  மருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் 
இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே மற்றும் இவர் உடம்பில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு வெறும் 0% இதனால் இவர் சாப்பிடாமல்  பட்டினி கிடக்கிறார் என்று அர்த்தம் இல்லைஇவர் ஒரு நாளைக்கு 60 முறை சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ??

lizzie என்ற இந்த பெண்ணுக்கு கிரிஸ் என்ற 15 வயது இளைய சகோதரரும் ,மரினா என்ற சகோதரி வயது 15 இருக்கிறார்கள் இவர்கள் மற்ற சிறுவர்களை போலவே நார்மலாக இருக்கிறார்கள்  
இந்த பெண்ணின் தாய் இவரை பற்றி கூறுகையில் ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார்  
 இவர் சிறுமியாக இருக்கும் போது பெரும்பாலும் இவருக்கான உடையை பொம்மைகளுக்கான உடைகள் விற்கும் இடத்தில்தான் வாங்குவார்களாம் ஏனென்றால்  மற்ற சிறுவர் கடைகளில் விற்கும் உடை இவருக்கு பொருந்தாது என்பதால்  
ஆனால் மருத்துவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே நோர்மலான வாழ்கை வாழ்ந்துவரும் lizze கூறுகையில் ''நான் தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் ''என்கிறார்




டிஸ்கி : இரண்டு முறை சாவின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளார் இவர் இருந்தும் சோர்ந்து வீட்டுகுள்ளேயே முடங்கிவிடாமல் தன்னம்பிக்கையோடு சாவோடு  போராடி வரும் இவர்நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான் 



மறக்காமல் ஒட்டு போடுங்க கருத்து மற்றவர்க்கும் பரவட்டும்  

Wednesday, February 2, 2011

உயிருடன் சாகிறேன் நானடா...

                                  வாழ்வதற்கும்  பிடிக்கவில்லை 
                                  சாவதற்கும்  தைரியமில்லை
                                  உன்னை நினைவுகளுக்குள் மூழ்கி 
                                  வாழ்ந்துகொண்டே சாவதைத் தவிர
                                   என்ன செய்து விட முடியும்
                                    இந்த பேதைப் பெண்ணால்? 

Tuesday, February 1, 2011



பார்க்கும் இடத்தில எல்லாம்
உன் உருவம் தெரிந்தால் கூட
என் பார்வைகளை வேறு பக்கம்
திருப்பி கொள்ளுவேன்
என் பார்வையே நீயாகி போன பின்
எங்கனம் உன் நினைவுகளை என்னை
விட்டு பிரித்தெடுப்பேன்  சொல் அன்பே.........

Monday, January 31, 2011

என் காதலின் காணிக்கை!!!



இப்போதெல்லாம் நீ எனக்கு அதிகமான வலிகளையும்
கண்ணீரையும் மட்டுமே தந்து  கொண்டு இருந்தாலும்
 என்றுமே நான் உனக்கு என் புன்னகையை மட்டுமே பரிசாய்  தருவேன் 
நீ தந்த இன்பமான நாட்களின் நினைவுகளிலேயே 
தங்கி விட ஏங்குது என் மனம் 
நீ தந்த கண்ணீர்த்துளிகளை எல்லாம்
முத்தாய் மாற்றி சேமித்து வைத்துள்ளேன்
நாம் சந்திக்கும் நாளில்
உன் காலடியில் சமர்ப்பிப்பேன் 
என் காதலின் காணிக்கையாய் !!!

Sunday, January 30, 2011

உன் நினைவுகளின் நிழலில் ..........



உன்னை எண்ணி உனக்காக கலங்குவதையே 
தொழிலாக கொண்டிருந்த என் கண்கள் கூட 
கலங்குவதை நிறுத்தி விட்டன சில நாட்களாய்
ஆனால் இந்த பாவப்பட்ட நெஞ்சமோ நிறுத்தாமல்
கலங்கி கொண்டுதான்  இருக்கிறது
உன்னையும் உன் நேசத்தையும் நினைத்து.... 
திருவிழா நெரிசலில் சேயை தவறவிட்ட
தாய் போல் என் நெஞ்சின்
படபடப்பும் துடி துடிப்பும்....
இன்னும் எத்தனை காலத்திற்கோ?
விடை தெரியா கேள்விகள் ......
விடையாய் நீ வரும் வரை  காத்திருப்பேன்.....
உன் நினைவுகளின் நிழலில் .................

Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...

உங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி